பாடம் மட்டும் நடத்தணும்.. புக், யூனிபார்ம் விற்றால் அவ்வளவுதான்... சிபிஎஸ்இ எச்சரிக்கை

பாடம் கற்றுத் தருவதை விட்டு, புத்தகம் சீருடை விற்பனையில் ஈடுபடும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

சென்னை : பாடம் கற்றுக்கொடுக்கும் பள்ளிகள் புத்தகம், சீருடை, புத்தகப்பை போன்ற விற்பனைகளில் ஈடுபட்டால் பள்ளி அங்கீகாரமே ரத்து செய்யப்படும் என சி.பி.எஸ்.இ எச்சரித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பாடபுத்தகம், லேப் டாப் மற்றும் சீருடை உள்ளிட்டடவைகள் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஆனால் தனியார் பள்ளிகளில் இந்தப் பொருட்களை பெற்றோர்கள் விலைக் கொடுத்துதான் வாங்க வேண்டும். அதுவும் அதிகமான விலைக் கொடுத்து வாங்க வேண்டி உள்ளது.

பகல் கொள்ளை

பகல் கொள்ளை

மெட்ரிக், ஆங்கிலே இந்தியன் மற்றும் சி.பி.எஸ்.இ, பள்ளிகள் மாணவர்களுக்கான புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள். ஷீ போன்றவற்றை அதிக விலைக்கு மாணவர்களிடம் விற்கின்றனர். இதன் மூலம் கணிசமான தொகையை பள்ளிகள் சம்பாதித்து விடுகிறார்கள்.

காசை கறக்கிறார்கள்

காசை கறக்கிறார்கள்

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பள்ளிக் கட்டணமே அதிகமாக வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு கணிசமான தொகையை பள்ளி நிர்வாகம் கூட்டிக் கொண்டே வருகிறது. இது போதாதுன்னு புக் நோட் டிரஸ்ன்னு பெற்றோர்களிடமிருந்து காசை கறந்து விடுகிறார்கள்.

பல லட்சம் லாபம்
 

பல லட்சம் லாபம்

இந்த வியாபாரத்தில் ஒவ்வொரு பள்ளிகளும் பல லட்சம் வரை லபாம் பார்க்கின்றனர் என பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஸ்போர்ட்ஸ் டிரஸ்னு சொல்லிக்கிட்டு அதுக்கு ஒரு அமோண்ட் வாங்கிவிடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் வெறும் ஷாக்ஸ் மட்டும் வாங்குவதற்கே ரூ. 500 முதல் ரூ. 1000 வரை கூட வசூல் செய்கின்ற பள்ளிகளும் இருக்கின்றன.

நோ பிஸ்னஸ்

நோ பிஸ்னஸ்

இதுகுறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இயின், அங்கீகார பிரிவு துணை செயலர் ஸ்ரீனிவாசன் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டடார். அதில் புத்தகம், எழுதுப் பொருட்கள், சீருடை, ஷூ, புத்தகப்பை போன்றவற்றை விற்கும், வணிக ரீதியிலான நடவடிக்கைகளில், பள்ளிகள் ஈடுபடக் கூடாது என்ற விதி உள்ளது.

பள்ளி அங்கீகாரம் ரத்து சிபிஎஸ்இ எச்சரிக்கை

பள்ளி அங்கீகாரம் ரத்து சிபிஎஸ்இ எச்சரிக்கை

ஆனால், பல பள்ளிகள், இது போன்ற வியாபாரத்தில் ஈடுபடுவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பள்ளிகள், தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுடன் மறைமுக ஒப்பந்தம் செய்து, வணிக பணிகளில் ஈடுபடுகின்றன. எனவே, மீண்டும் எச்சரிக்கிறோம். வணிக செயல்பாடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தால், அந்த பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அங்கீகார விதிகளின் படி, பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும். என சி.பி.எஸ்.இ எச்சரித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Central Board of Secondary Education has announced that (abbreviated as CBSE) is a Board of Education for public and private schools, under the Union Government of India. Central Board of Secondary Education (CBSE) has asked all schools affiliated to follow only NCERT curriculum.[1]
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X