1114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு... பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு.....

முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு

சென்னை : முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள்.

ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது.

ஏற்கெனவே 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்டிருப்பதால் தங்களை பணியில் அமர்த்திய பின்பு புதிதாக தேர்ச்சி பெறுவோருக்கு பணி வழங்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

1114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு... பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு.....

இந்த நிலையில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இந்த காலியிடங்கள் பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித் துறை, சமூக பாதுகாப்புத்துறை, மத்திய இடைநிலை கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.

அந்த பணியிடங்களில் பாடப்பிரிவுகள் வாரியான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. நிரப்பப்படும் காலியிடங்களில் புவியியல், வரலாறு, தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளில்தான் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், பிசி (முஸ்லிம்) ஆகிய இட ஒதுக்கீட்டினருக்கான காலியிடங்கள் அதிகமாக இருக்கின்றன. துறைவாரியாகவும் பாடப் பிரிவுகள் வாரியாகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகவும் காலியிடங்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு இருக்கிறது.

மேற்குறிப்பிட்ட பணி நியமனத்துக்காக முந்தைய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் தனியாக ஏதும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஏற்கெனவே உள்ளது. முன்பு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வேலையில் சேராமல் தற்போது சேர விரும்புவோர் மட்டும் மே 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அதன் தலைவர் காகர்லா உஷா அறிவித்துள்ளார். தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அது முடிந்ததும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தெரிவு பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Announcement of vacancies for the course wise for 1114 Graduate Teacher Workplace. There are vacancies in geography, history and Tamil courses.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X