தமிழக என்ஜீனியரிங் கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதம் வெளியீடு.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள என்ஜீனியரிங் கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதில் 3 கல்லூரிகளில் யாரும் தேர்ச்சி பெறவில்லை.

சென்னை : தமிழகத்தில் என்ஜீனியரிங் மாணவர் சேர்க்கையை கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இந்த வருடம் என்ஜீனியரிங் சேர்க்கைக்கு 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

மாணவ மாணவிகள் கல்லூரிகளை தேர்வு செய்ய கடந்த ஆண்டு கட்-ஆப் மதிப்பெண் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதம் என்ன என்பது அவர்களுக்கு தெரியாத நிலை இருந்தது. எனவே கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை வெளியிட அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு வெளியிட்டு இருந்தது.

தமிழக என்ஜீனியரிங் கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதம் வெளியீடு.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

அதன் படி அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை நேற்று வெளியிட்டது. அதில் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற அரசு என்ஜீனியரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜீனியரிங் கல்லூரிகளில் 2016 ஏப்ரல், டிசம்பரில் செமஸ்டர் தேர்வுகளுக்கு எத்தனை மாணவர்கள் அனுப்பப்பட்டனர், அவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட விபரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணைதளத்தில் (www.coe.annauniv.edu) வெளியானது.

2016 டிசம்பர் மாத தேர்வு முடிவுகளின் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த என்ஜீனியரிங் கல்லூரிகள் விரவம்

முதல் 10 இடங்கள்

1. இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி கல்லூரி - சேலம் (97.74 சதவீதம் தேர்ச்சி)

2. பி.எஸ்.ஜி. இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் அப்ளைடு ரிசர்ச் - கோவை (94.65 சதவீதம் தேர்ச்சி)

3. வி.எஸ்.பி என்ஜீனியரிங் கல்லூரி - கரூர் (93.47 சதவீதம் தேர்ச்சி)

4. ராம்கோ இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி - விருதுநகர் ( 92.69 சதவீதம் தேர்ச்சி)

5. கே. ராமகிருஷ்ணன் என்ஜீனியரிங் கல்லூரி - திருச்சி ( 91.48 சதவீதம் தேர்ச்சி)

6. ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி - காஞ்சிபுரம் (91.16 சதவீதம் தேர்ச்சி)

7. ஸ்ரீ சாய்ராம் என்ஜீனியரிங் கல்லூரி - காஞ்சிபுரம் (90.32 சதவீதம் தேர்ச்சி)

8. சாரநாதன் என்ஜீனியரிங் கல்லூரி - திருச்சி (90.09 சதவீதம் தேர்ச்சி)

9. வேலம்மாள் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி - திருவள்ளூர் (89.47 சதவீதம் தேர்ச்சி)

10. கொங்குநாடு என்ஜீனியரிங் கல்லூரி மற்றும் டெக்னாலஜி - திருச்சி (87.97 சதவீதம் தேர்ச்சி)

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University has been conducting annual counselling for engineering admission in Tamil Nadu. 1 lakh 40 thousand 451 people have applied for this year.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X