பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான அரசு சில வேலை வாய்ப்புகள் வழங்குகின்றன .

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான அரசு சில வேலை வாய்ப்புகள் வழங்குகின்றன. மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்தலாம்.

By Sobana

அரசு வாய்ப்புகள் :

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான பயிற்சி படிப்புகளை மத்திய அரசின் தொழிற் துறை அமைச்சகம் ஐடிஐ, ஐடிசி அமைப்பு தொழில் நுட்ப பயிற்சி வழங்குகின்றது . இதற்கு அடிப்படையாக எலக்ட்ரீசியன், மெசினிஸ்ட் , ஃபிட்டர், வெல்டர் போன்ற அடிப்படை தகுதிகள் இருந்தால் பயிற்சிகள் தருகின்றன. இதன் பயிற்சிகாலம் ஒராண்டு முதல் மூன்றாண்டு வரை இருக்கும். மேலும் நேரடியாக நிறுவனங்களில் பயிற்சியில் அமர்த்தி ஆல் இண்டியா டெஸ்ட் சான்றிதழ் வழங்குகின்றன. அத்துடன் மத்திய அரசு நிறுவனமான இரயில்வே மற்றும் தொலைதொடர்பு நிறுவனத்தில் ரிட்டன் டெஸ்ட் எனப்படும் எழுத்து தேர்வு வைத்து வேலைக்கு பணியமர்த்துகிறது .

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள்
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்திய இராணுவத்தில் அடிப்படை வீரரான சோல்ஜர் பதவிக்காக ஒரு சிறு எழுத்து தேர்வு வைத்து கிளார்க் பதவி தரப்படுகின்றன. இத்தகைய தேர்வானது இந்தியன் ஆர்மி சோல்ஜர், மற்றும் நர்சிங் , மற்றும் தொழிநுட்ப பிரிவிலும் நடத்தப்பட்டு வாய்ப்பளிக்கின்றது .
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள்
மத்திய கப்பல்படையும் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக அப்ரண்டிஸ் , ஆர்டிஃபிசியர் அப்ரண்டிஸ் , டக்யார்டு போன்ற பதவிகளுக்கு எழுத்து தேர்வு வைத்து தேர்ந்தெடுக்கின்றனர் . மேலும் மத்திய காவல் படையான சிஆர்பிஎஃப் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு எழுத்து தேர்வு மூலம் கான்ஸ்டபிள் பணி வாய்ப்பு தருகின்றன .

மத்திய பணி நிறுவனமான ஸ்டாஃப் செலக்ஸன் கமிசனும் பத்தம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கிளாரிக்கல் தேர்வு வைத்து பணியமர்த்துகின்றன. மேலும் கற்பிக்க விருப்பமுள்ளவர்களுக்கு மூன்று வருடம் பயிற்சி வழங்கி பிரைமரி எனப்படும் ஆரம்பக்கல்வி ஆசிரியராகவும் பணியமர்த்துகின்றன .

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள்

தமிழ்நாடு அரசு விஏஒ தேர்வு எழுத பத்தாம் வகுப்பு தகுதியே வைத்துள்ளது. அஞ்சல் அலுவலகத்திலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகின்றன .

" போகும் பாதை வெகுதூரமில்லை தொடர்ந்து பயணிப்பதே வாழ்வின் கடமை ,,,, தொடர்வோம் பயணத்தை நல்ல தேடலுடன் "

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
above article tell about government opportunities for tenth standard finished students.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X